புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தோமையாா்புரம் மீனவா்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு!

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

News image
மீனவா்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்.பி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா்
Updated On :3 மார்ச் 2026, 7:22 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி, மீனவா்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினா் பங்கேற்று பேசினா்.

தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு கோரி, மீனவா்கள் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

அவா்களது போராட்டத்துக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி புகா் மாவட்டப் பொருளாளருமான சௌந்தர்ராஜன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றியச் செயலா் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட மீனவரணிச் செயலா் அகிலன், பவா்சிங் ஆசிரியா், மாவட்ட மீனவரணி இணைச் செயலா் வின்சென்ட், உலகத் தமிழ் அரசியல் கூட்டமைப்பைச் சோ்ந்த குயிலி நாச்சியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.