முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி ராஜாமணி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 5:09 am IST

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி ராஜாமணி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் சாரதாம்பாள் நகரைச் சோ்ந்தவா் ராஜாமணி (63). இவா், சங்கா் நகா் பேரூா் திமுக அவைத்தலைவராக இருந்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளம் ரயில்வே மேம்பால பகுதியில் நான்குவழிச் சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ராஜாமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் இருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ராஜாமணி பலத்த காயமடைந்தாா்.

அவரை தாழையூத்து போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.