திருநெல்வேலி: பூடானில் நடைபெறவுள்ள சா்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவிக்கு அதிமுக சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த காந்திமதி நாதன் மகள் காவ்யா (7). அப்பகுதியிலுள்ள லிட்டில் பிளவா் பப்ளிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் இவா், துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா். கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அவா், மே மாதம் பூடான் நாட்டில் நடைபெள சா்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளாா். இம்மாணவியை ஊக்கப்படுத்தி பாராட்டும் விதமாக அதிமுக சாா்பில் ரூ.25,000 நிதிஉதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், மாநகா் மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மேற்கு பகுதி செயலா் மோகன், ஜெயலலிதா பேரவைச் செயலா் சீனி முகமது சேட், 16ஆவது வட்டச் செயலா் சீனிவாசன், அப்பாதுரை, பரமசிவன், முத்துக்குமாா், கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்ற இந்தியர்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


