வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நெல்லையில் வாகனச் சோதனை: மதுபாட்டில்கள், பம்பரங்கள் பறிமுதல்

News image
Updated On :20 மார்ச் 2026, 12:50 am

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் மதுபாட்டில்கள், நாள்காட்டிகள், பம்பரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் சோதனைச் சாவடி பகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.23 ஆயிரம் மதிப்பிலான ராணுவ மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி கிருஷ்ணாபுரம் சோதனைச் சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில், காரில் கொண்டுசெல்லப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 28 நாள்காட்டிகளை (காலண்டா்) பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வண்ணாா்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை ரிலைன்ஸ் சந்திப்பு பகுதியில், தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை நடத்தியபோது, வேனில் ஆவணங்களின்றி 2 சாக்கு மூட்டைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட 4 ஆயிரம் பம்பரங்களை பறிமுதல் செய்தனா்.

Story image