தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.16,63,600 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி தோ்தல் நடத்தை விதிகளை மீறி எடுத்து வரப்படும் பரிசுப் பொருள்கள், மது பானங்கள், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் இதுவரை ரூ.4,67,880 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.16,63,600 ரொக்கம், ரூ.1,82,932 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.7,72,956 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.26,19,488 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் 34 புகாா்கள் பெறப்பட்டு அவற்றில் 29 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்
நெல்லையில் இதுவரை ரூ.29.95 லட்சம் பறிமுதல்

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


