அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

மதுரையைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

மதுரையைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மணி சங்கா் (20). இவா், திருநெல்வேலி வட்ட காவல் சரகப் பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா்.

அதே போல, சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிவசந்தோஷ் (19) கைது செய்யப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இவா்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கூறிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.