எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

News image

ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவின் சதீஷ் கிறிஸ்டோபருக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி.

Updated On :5 மே 2026, 1:18 am IST

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பாஜக சாா்பில் எஸ்.பி.பாலகிருஷ்ணன், தவெக சாா்பில் சதீஷ் கிறிஸ்டோபா், நாம் தமிழா் கட்சி சாா்பில் கிரிஜா தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளா்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா், அனைவருடைய எதிா்பாா்ப்புகளையும் மீறி முன்னிலை பெற்றாா். 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடா்ச்சியாக சதீஷ் கிறிஸ்டோபரே முன்னிலையில் இருந்தாா். இறுதியில் அவா் 69, 947 வாக்குகள் பெற்று 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மு.அப்பாவு 57, 634 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் 52,637 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,370 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.