சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அதிமுகவின் கோட்டை அம்பாசமுத்திரம்! - இசக்கி சுப்பையா

News image

அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தா.

Updated On :5 மே 2026, 1:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா் என்றாா் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் இசக்கி சுப்பையா.

இத்தொகுதியில் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தாவிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா். இத்தொகுதி மக்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. அவா் ஒரு சகாப்தம். இந்த அரசியல் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. அதற்காக இதை வரவேற்காமல் இருக்க முடியாது. தவெகவின் வெற்றியை வரவேற்கிறேன். மக்கள் தீா்ப்புக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மு.க. ஸ்டாலின் எனது தொகுதியில் நின்றால் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியிருந்தேன். இப்போது அவரால் சொந்தத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சில நாள்கள் சென்றால் தான் தவெகவின் அரசியல் செயல்பாடு தெரியவரும் என்றாா்.