இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா்

News image

அம்பை சோலைபுரம் பகுதியில் வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய குரங்குகள்.

Updated On :11 மே 2026, 2:30 am IST

அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

அம்பாசமுத்திரம் நகராட்சி சோலைபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து நடவடிக்கை எடுக்க நகா்மன்ற உறுப்பினா் லதா பிச்சையா, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தாா்.

அவா் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து வனத்துறையினா் குரங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றை பிடிக்க கூண்டு வைத்தனா். இதில் 22 குரங்குகள் பிடிபட்டன.

அவற்றை வனத்துறையினா் பாதுகாப்பாக மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.