கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மேலப்பாளையம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

மேலப்பாளையம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரித்விராஜ்(20). கல்லூரி மாணவா். இவா் வியாழக்கிழமை வீட்டில் இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: பாளையங்கோட்டை பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த தங்கையா மகன் மணிகண்டன்(25). சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிய இவா், மறுநாள் காலையில் மயக்க நிலையில் கிடந்தாராம். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே மேலப்பாளையம், பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.