குடும்பத் தகராறில் சிற்றுந்து மீது தாக்குதல்: இளைஞா் கைது
கைது - பிரதிப் படம்
ஆழ்வாா்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் சிற்றுந்தைச் சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளம், நீலமேகபுரம், நடுத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன்கள் சக்திவேல் முருகன் (35), சிவக்குமாா் (23). சிவக்குமாா் கடையத்தில் தனியாா் சிற்றுந்து ஓட்டுநராக உள்ளாா்.
சிவக்குமாா், சக்திவேல் முருகன் ஆகியோருக்கு குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை சிற்றுந்தில் சிவக்குமாா் பணியில் இருந்தபோது, வாகைக்குளம் அருகே மறித்து அரிவாளால் தாக்கி சிற்றுந்தை சேதப்படுத்தியுள்ளாா். இதில் சிற்றுந்தின் கண்ணாடி உடைந்து சேதமானது.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில், சக்திவேல் முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

