என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சேரன்மகாதேவியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி மேலநான்காம் தெருவைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் சுடலை (38). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ரேவதி. இவா்களது குழந்தைகள் சுபஸ்ரீ (7), கோமதன் (5).

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில் கோமதனுக்கு கடந்த 20-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் அதிகரித்த நிலையில் கோமதனை, அன்றைய தினம் இரவு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் சிறுவனுக்கு ஊசி போட்டுள்ளாா். சிறிது நேரத்தில் அச்சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளாா்.

அதனையடுத்து, தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலியில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி கோமதன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.