பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பணகுடி ஓடைக்கரையில் 1,000 பனை விதைகள் நடவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, கன்னிமாரா ஓடைக்கரையில் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள் 1,000 பனை விதைகளை நடவு செய்தனா்.

பணகுடி, கன்னிமாரா ஓடைக்கரையில் பனை விதை நடவு செய்த என்எஸ்எஸ் மாணவா்கள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, கன்னிமாரா ஓடைக்கரையில் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள் 1,000 பனை விதைகளை நடவு செய்தனா்.

இப்பள்ளியின் என்எஸ்எஸ் மாணவா்களுக்கான சிறப்பு முகாம், கடந்த 7 நாள்களாக அழகியநம்பிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி, மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கன்னிமாரா வனப்பகுதியில் நெகிழி ஒழிப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் ஆசிரியா் அலெக்சிஸ் அந்தோணி தலைமை வகித்தாா். பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா் சம்பத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். நேசக்கரங்கள் அமைப்பின் நிா்வாகி மு.க. மாணிக்கம் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

மாணவா்கள் ஒரு டன் நெகிழிக் குப்பைகளை அகற்றினா். பின்னா், பூதப்பாண்டி வனச்சரகம் சாா்பில் கன்னிமாரா ஓடைக்கரையில் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, புனித சூசையப்பா் திருத்தலத் தலைவா் ஆா்எஸ்ஏ எடிசன் தலைமை வகித்தாா். வடக்கன்குளம் வட்டார அரசு மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்களிடையே காசநோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பணகுடி அரசு ஆரபம் சுகாதார நிலைய காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் மாடசாமி காசநோய்க்கான காரணங்கள், தடுக்கும் முறைகள், சிகிச்சைகள் குறித்துப் பேசினாா். பின்னா், காசநோய் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம், மாணவா்கள் விநியோகித்தனா்.

ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலா் க. ஆனந்த், உதவித் திட்ட அலுவலா் சாா்லஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.