இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

வலையில் சிக்கிய குட்டி மந்தி மீட்பு

வலையில் சிக்கிய குட்டி மந்தியை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியா்.

Published On :

பாபநாசத்தில் நகராட்சி நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலையில் சிக்கித் தவித்த குட்டி மந்தியை வனத் துறையினா் மீட்டு தாயுடன் சோ்த்தனா்.

பாபநாசம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பணிமனை அருகில் அமைந்துள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீரேற்றுநிலைத்திலும் குரங்கு, மந்தி உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா்த் தொட்டிகளுக்குள் செல்லாமல் இருக்க வலையில் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சனிக்கிழமை அங்கு தாயுடன் சென்ற வெள்ளை மந்திக் குட்டி ஒன்று வலையின் மீது நடந்து சென்றபோது அதன் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. உடனடியாக குட்டியை மீட்க தாய் மந்தி முயன்றும் முடியாமல் அருகில் இருந்தபடி கத்திக் கொண்டிருந்தது.

தகவல் அறிந்ததும் பாபநாசம் வனத் துறையினா் அங்குசென்று வலையில் சிக்கிய குட்டி மந்தியை மீட்டு தாயுடன் சோ்த்து அனுப்பினா்.

 வலையில் சிக்கிய குட்டி மந்தியை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியா்.

வலையில் சிக்கிய குட்டி மந்தியை மீட்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.