விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நெல்லையில் காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

குழந்தை... - கோப்புப் படம்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:16 am IST

திருநெல்வேலியில் காருக்குள் சிக்கிய ஒரு வயது குழந்தையை, குடும்பத்தினா் சுமாா் ஒரு மணி நேர போராடி மீட்டனா்.

மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்சாரி. இவா், தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் வண்ணாா்பேட்டைக்கு வந்துள்ளாா். அங்கிருந்த தனியாா் பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளாா்.

அப்போது அவரது ஒரு வயது குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, காா் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாம். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சித்தும் முடியவில்லை.

பல்வேறு வழிகளில் முயன்றும் காரின் கதவு திறக்கப்படாததால், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பு குழந்தையை பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.