
சொகுசு காருக்குள் சிக்கிய ஒரு வயதுக் குழந்தை! நெல்லையில் பதற்றம்!
நெல்லையில் சொகுசு காருக்குள் சிக்கிய ஒரு வயதுக் குழந்தைப் பற்றி..

நெல்லையில் சொகுசு காருக்குள் இன்று காலை சொகுசு காருக்குள் ஒரு வயதுக் குழந்தை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அவரது ஒரு வயதுக் குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்கக் கடுமையாகப் போராடினார். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்ததுடன், பல்வேறு வழிகளில் காரை திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.
சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் காரின் கதவிலிருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த 1 வயதுக் குழந்தைப் பத்திரமாக மீட்கப்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயதுக் குழந்தை சிக்கிய சம்பவத்தால் நெல்லை வண்ணாரப்பேட்டை பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






