மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிப்பு! வாசலில் வந்து நின்ற சொகுசு கார்கள்!

பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தலைமைச் செயலக வாசலில் சொகுசு கார்கள் வந்திருப்பது பற்றி..

சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

Published On :

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த அடுத்த நாளே, தலைமைச் செயலக வளாகத்தில் மகிந்திரா நிறுவன கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால், இவையெல்லாம் உண்மையில் ஓட்டிப் பார்த்து முடிவெடுக்க கொண்டு வரப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ளதா என்ற உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை.

மகிந்திரா நிறுவனத்தின் பல்வேறு வகையான கார்கள் தலைமைச் செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விலை மற்றும் அதன் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்றும், இன்று டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு, எந்தக் கார் வாங்குவது என முடிவெடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகிந்திரா நிறுவனத்தின் கார்களின் டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட கார்கள், தலைமைச் செயலகத்தில் இன்று அணிவகுத்து இருந்ததைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்தனர்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஏன் கார் வழங்க வேண்டும் என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுந்திருக்கும் நிலையில், நேற்று பேரவையில் முதல்வர் அறிவித்த நிலையில், இன்றே டெஸ்ட் டிரைவ் செய்ய கார்கள் வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமைச் செயலத்தில் மகிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி 7XO, ஸ்கார்பியோ என், 3XO, கிளாசிக், பொலேரோ, பொலேரோ நியோ வகை என மொத்தம் 6 வகைக் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Summary

Announcement of cars for MLAs in the Assembly! Luxury cars arrived and lined up at the entrance!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.