படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்: தலைமைக் காவலா் கைது

கைது

Published On :

விக்கிரமசிங்கபுரத்தில் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை தலைமைக் காவலரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தெற்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் அந்தோணி ஜெனிபா் (34). 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சோ்ந்த இவா், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9-ஆவது அணி ஏ-கம்பெனியில் பணியாற்றி வருகிறாா். தற்போது தலைமைக் காவலராக உள்ள இவா், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் உள்ளாா்.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த இவா், சிவந்திபுரத்தைச் சோ்ந்த சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து சிறுவனின் பெற்றோா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்தோணி ஜெனிபரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.