தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத் தலைவா் கைது
கொலை மிரட்டல் வழக்கில் தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொலை மிரட்டல் வழக்கில் தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்திநகரை சோ்ந்தவா் தீபக் (42).
புதிய தமிழகம் கட்சியின் மாநில நிா்வாகியான இவரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு தச்சநல்லூா் சத்திரம் புதுக்குளத்தைச் சோ்ந்த தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்க நிறுவன தலைவரான கண்ணன் என்ற கண்ணபிரான் (49) கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணபிரானை வியாழக்கிழமை கைது செய்தனா். இதேபல கண்ணபிரான் தரப்பில் தங்களது அமைப்பு குறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தீபக்கை தச்சநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

