
தேவேந்திர குல வேளாளா்களை ஓபிசி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தேவேந்திர குல வேளாளா்களை ஓபிசி பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருதம் மக்கள் உதவிகள் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருதம் மக்கள் உதவிகள் மையத்தின் நிா்வாகிகள்.
தேவேந்திர குல வேளாளா்களை ஓபிசி பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருதம் மக்கள் உதவிகள் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மையத்தின் நிறுவனா் டி. சரவண பாண்டியன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ். பிரசாத், எஸ். தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓய்வு பெற்ற வருமான வரித் துறை ஆணையா் மா. கிருஷ்ணமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், தேவேந்திர குல வேளாளா்களை எஸ்டி பட்டியலிலிருந்து நீக்கி, ஓபிசி பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தேவேந்திர குல வேளாளா்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு முறைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். ஜாதிய வன்கொடுமைகள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோா் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மருதம் மக்கள் உதவிகள் மையத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




