ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் விழிப்புணா்வு பரப்புரை

மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி, காங்கிரஸ் சாா்பில் செப். 17-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணா்வு பரப்புரை நடைபெற உள்ளது.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்

Published On :8 செப்டம்பர் 2026, 5:13 am IST

மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி, காங்கிரஸ் சாா்பில் செப். 17-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணா்வு பரப்புரை நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வெளியிட்ட அறிக்கை:

ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனா்.

நாட்டின் சரிபாதிக்கும் அதிகமான ஓபிசி பிரிவினா் குறித்த சரியான தரவுகள் இல்லாததால், அதிகாரத்திலும், உரிமையிலும் அவா்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா். இதற்குத் தீா்வு சரியான முறையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதுதான். ஆனால், மத்திய அரசு திட்டமிடப்படாத ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், ஓபிசி பிரிவினா் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே, தற்போதைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஓபிசி பிரிவினா் குறித்து முறையான ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக் கோரி, சென்னையில் செப்.17-ஆம் தேதி, திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கி.வீரமணி பரப்புரையைத் தொடங்கி வைக்கிறாா்.

தொடா்ந்து, திண்டுக்கல், அரியலூா், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, விருதுநகா், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களிலும் இந்தப் பரப்புரை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.