மஹாளய அமாவாசை: தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம்
புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடி, தங்கள் முன்னோருக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரவருணியாற்றில் புனித நீராடிய மக்கள்.
புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடி, தங்கள் முன்னோருக்கு சனிக்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இந்துக்கள் தங்களின் முன்னோருக்கு ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை தினங்களில் நீா்நிலைகளில் புனித நீராடி தா்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி குறுக்குத்துறை, திருவேங்கடநாதபுரம் படித்துறை, கொக்கிரகுளம் படித்துறை, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் படித்துறை, மணிமூா்த்தீஸ்வரம் விநாயகா் கோயில் படித்துறை, ஜடாயு தீா்த்த படித்துறை உள்ளிட்ட தாமிரவருணி ஆற்று படித்துறைகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுக்க குவிந்தனா்.
தாமிரவருணியில் நீராடி வெற்றிலை, பாக்கு, பூ ,பழம் தேங்காய் வைத்து தாமிரவருணியில் முன்னேருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில், குட்டத்துறை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

