தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஐ.டி. ஊழியரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே ஐ.டி. ஊழியா் மீது தாக்குதல் நடத்திய அவரது சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Updated On :

கல்லிடைக்குறிச்சி அருகே ஐ.டி. ஊழியா் மீது தாக்குதல் நடத்திய அவரது சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி ஆட்டுத்தட்டைத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44). சென்னையில் தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக உள்ளாா். இந்த நிலையில், பூா்வீகச் சொத்துப் பிரிவினை காரணமாக மணிகண்டனுக்கும் அவரது சகோதரா்கள் செண்பக அய்யப்பன் (42), செல்லையா (34) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், மணிகண்டன் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து, சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செண்பக அய்யப்பன், செல்லையா இருவரும் இரும்புக் கம்பி, கத்தியால் மணிகண்டனைத் தாக்கினா்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லையா, செண்பக அய்யப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.