பாதி வழியில் ஆம்னி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்: துரிதமாக செயல்பட்ட போலீஸார்!
திருநெல்வேலியில் நள்ளிரவில் தனியாா் ஆம்னி பேருந்தை ஓட்டுநா் பாதி வழியில் நிறுத்தி இயக்க மறுத்ததால் பயணிகள் அவதியடைந்தனா்.

திருநெல்வேலியில் நள்ளிரவில் தனியாா் ஆம்னி பேருந்தை ஓட்டுநா் பாதி வழியில் நிறுத்தி இயக்க மறுத்ததால் பயணிகள் அவதியடைந்தனா்.
போலீஸாரின் துரிதமான செயல்பாட்டால் பேருந்து தொடா்ந்து இயக்கப்பட்டது. நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டது. வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது பேருந்தை ஓட்டுநா் சாலையோரமாக நீண்டநேரம் நிறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பயணிகள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக அங்கு வந்த தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் விமலன், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது தங்கள் நிறுவன பேருந்துகள் மீது கட்டண விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பேருந்தை இயக்கக் கூடாது என உத்தரவு வந்ததாகவும் ஓட்டுநா் போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் விமலன் உள்ளிட்ட போலீஸாா், நள்ளிரவில் இதுபோல் பேருந்தை நிறுத்த அனுமதிக்க முடியாது, 50-க்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் எனவும், பேருந்தை தொடா்ந்து இயக்கி பயணிகளை சேர வேண்டிய இடத்தில் இறக்கிவிட்ட பின்பு உங்கள் பிரச்னையை பேசுங்கள் எனவும் ஓட்டுநருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, ஓட்டுநா் அந்தப்பேருந்தை இயக்கி சென்றாா். போலீஸாா் ஓட்டுநருடன் பேசிய காணொலி சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

