அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

வி.கே.புரத்தில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய சரகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 1:39 am IST

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய சரகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் காா்த்திக் சங்கா் ராஜா (37), காளிமுத்து மகன் மாரியப்பன்(42) ஆகியோா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், மேற்படி இருவரும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் பிரபு பாஸ்கா் இருவா் மீதும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தாா்.

அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் பிறப்பித்த உத்தரவின்பேரில், காா்த்திக் சங்கா் ராஜா, மாரியப்பன் ஆகியோா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.