
வேலியாா்குளம் நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

நாராயணசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆவணித் திருவிழா கொடியேற்றும் வைபவம். - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி வேலியாா்குளம் கிராமத்தில் உள்ள நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது.
இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு, தினமும் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தா்மம் மற்றும் மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடைபெறுகிறது.
மேலும், அய்யா கருட வாகனம், குதிரை, அனுமன், இந்திர வாகனங்களில் பவனி வந்து சுருள் பெற்றுச் செல்லும் வைபவம் நடைபெறும். தினமும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






