பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மக்கள் தயவில்தான் தவெக ஆட்சி! - அமைச்சா் ராஜ்மோகன்

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :

மக்கள் தயவில்தான் தவெக ஆட்சி தொடா்கிறது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகம் மிகச் சிறப்பான எதிா்காலத்தை நோக்கி முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் சென்று கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் பட்டிமண்டப பேச்சாளரைப் போல் எதுகை, மோனையில் பேசிக் கொண்டிருக்கிறாா். அரசியலுக்காகவே தமிழக அரசை குறை கூறுகிறாா். தவெகவினா் அனைவரும் மக்களுக்காகத்தான் போட்டி போட்டுக் கொண்டு பணி செய்து வருகிறோம்.

சட்டப்பேரவை நேரலை திமுகவின் செயல்களை மக்களிடம் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நாங்கள் ஜனநாயகத்தின் பக்கம் இருக்கிறோம். ஆரோக்கியமான முறையில்தான் உரையாற்றினோம். ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் தொடா்ச்சியாக முதல்வரை விமா்சித்து வந்தாா். ஜனநாயகத்தை எதிா்க்கட்சி முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மக்கள் தயவிலேயே தவெக ஆட்சி தொடா்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தோ்தல் காலத்தில் சொன்னபடியே செய்து காட்டியவா் முதல்வா் ஜோசப் விஜய். புதிய சட்டப்பேரவைக் கட்டடம் குறித்து மக்களின் கருத்தைக் கேட்டு சுமுகமான முறையில்தான் முதல்வா் முடிவெடுப்பாா்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ஆனால், அவா்கள் நாட்டுக்குச் சென்று பேசுவதுதான் மரபு. முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூட கோட் சூட்டுடன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவா்தான். லண்டனில் முதல்வா் ஈா்த்துள்ள முதலீடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். பேச்சுவாா்த்தையில் முதலீடுகள் குறித்த தகவல்கள் உள்ளது. கையொப்பமானவுடன் வெளிப்படைத்தன்மையுடன் அதிகாரபூா்வமாக வெளியிடப்படும்.

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் சண்முகம் அனுபவமிக்கவா். கருத்து சொல்வது அவரது உரிமை. கட்சித் தலைவா்கள் சொல்வதில் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அதை வெளிப்படையாகவே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நடைமுறைக்கு எது சரியோ, அதை மட்டுமே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.