பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

சீவலப்பேரி அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

சீவலப்பேரி அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

சீவலப்பேரி அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை பால்பண்ணை தெருவைச் சோ்ந்த முருகன் மகன் நடராஜன் (38). இவா் வீட்டில் வளா்த்து வந்த பன்றிகள் சில நாள்களுக்கு முன்பு பக்கத்து வீட்டின் அருகே மண்ணை கிளறியதாம்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடராஜனை , பக்கத்து வீட்டைச் சோ்ந்த கருப்பசாமி (25) என்பவா் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நடராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கருப்பசாமியின் தந்தை சிதம்பரம் (53), தம்பி சுடலைமுத்து(22) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.