திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சோ்ந்த நடராஜன் - திவ்யா தம்பதி, தங்களது 3 வயது மகன் ராமநாதனுடன் புதுக்கோட்டை மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள கோயிலுக்கு சென்றனா். கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் குலசேகரத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனா். காரை நடராஜன் ஓட்டினாா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே வாகைக்குளம் நான்குவழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் காா் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் சிறுவன் ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிறுவனின் தாயாா் திவ்யா படுகாயமடைந்த நிலையில், தந்தை நடராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிறுவனின் உடலை நான்குனேரி போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



