காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி விழா: ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தக்கலை, ஆக. 31:    திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் 162 பேருக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.   கன்

Updated On :20 செப்டம்பர் 2012, 10:37 pm IST

தக்கலை, ஆக. 31:    திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் 162 பேருக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

  கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் கல்வி உதவி அறக்கட்டளையும், சென்னை சீட்  (நஉஉஈ)  நிறுவனமும் இணைந்து இதை வழங்கின.

  இதற்கான விழாவிற்கு கல்லூரித் தாளாளர் எச். முகமது அலி தலைமை வகித்தார்.

  துணைச் செயலர் பெரோஷ்கான் கிராஅத் ஓதினார்.

  ஏ.டி.எஸ்.பி. (ஓய்வு) அ.மலுக் முதலி, முஸ்லிம் கல்விச் சங்க செயற்குழு உறுப்பினர் ஒய். யூசுப், திருவிதாங்கோடு ஜமாத் தலைவர் ஜி. குலாம் முகமது, கோட்டார் அரிப்பு தெரு ஜமாத் தலைவர் எஸ். செய்யது ஹைறோஸ், மூத்த வழக்கறிஞர் அகமத்ஹான், பேரூராட்சித் தலைவர் மாஜீதா புகாரி, முஸ்லிம் கல்வி உதவி அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.காதர் மொகைதீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர்

ஜே. ஹெலன் டேவிட்சன், சென்னை சீட் நிறுவனத் தலைவர் எஸ்.எம். செய்யது

அப்துல் காதர், இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் ஹதாயத்துல்லா ஆகியோர் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினர்.

  ஷாஜஹான் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் எச்.ஷாஜஹான், இம் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில் தனது டைய தந்தை எம்.ஏ. ஹனிபா சாகிப் பெயரில் ஹனிபா ஷாஜஹான் என்ற கல்வி அறக்கட்டளையை ரூ. 3 லட்சத்தில் நிறுவினார்.

  முன்னதாக, கல்லூரித் தலைவர் எஸ். செய்யது முகமது வரவேற்றார்.

  கல்வி உதவி அறக்கட்டளை துணைச் செயலர் முகமது சலீம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.