கருங்கலில் மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்


தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்கள் சங்கத்தின் கிள்ளியூர் ஒன்றியம் சார்பில், பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் கருங்கலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது மத்திய அரசு நிதியிலிருந்து ரூ.2000-ம் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கிள்ளியூர் ஒன்றியச் செயலர் சார்லஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வில்சன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் செல்லசுவாமி பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் ஜெரில்லா, வினோ,வின்சென்ட்ராஜா, செல்வன், ஜோண்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருங்கல் அஞ்சல் நிலையத்தின் மூலம், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 500 அட்டைகள் அனுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...