களியக்காவிளை அருகேயுள்ள திருத்துவபுரம், காட்டுக்குளம் அரசுமூடு அம்மன் கோவில் விழா செவ்வாய்க்கிழமை (மே 14) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.
நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், நண்பகலில் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல்நாள் இரவு 8.30 மணிக்கு பிரேமலதா கோபி தலைமையில் மகளிர் சமய மாநாடு, 4-ம் நாள் விழாவில் (மே 17) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 5-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவர்-மாணவிகளின் பண்பாட்டுப் போட்டிகள், 6-ம் நாள் விழாவில் இரவு 7.30 மணிக்கு சமய மாநாடு நடைபெறும்.
மே 20-ம் தேதி காலையில் மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்ஸன ஹோமம், திலஹோமம், சூக்தஹோமம் உள்ளிட்டவையும், காலை 10 மணிக்கு பொங்காலை வழிபாடும், தொடர்ந்து கலசபூஜை, நாகரூட்டு பூஜை, இரவு 10.30 மணிக்கு குருசி பூஜை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









