புதுவடிவம் பெறும் குமரி அரசு விருந்தினர் மாளிகைகள்
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைகளுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.


கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைகளுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கன்னியாகுமரியின் இதயம் என வர்ணிக்கப்படும் பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு விருந்தினர் மாளிகைகள் அமைந்துள்ளன.
இந்த வளாகத்தில் புதிய, பழைய விருந்தினர் மாளிகைகள் தவிர பொய்கை, பாரதி அரசு விருந்தினர் மாளிகைகள் என 4 கட்டடங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன.
விஐபிக்கள் நேரடியாக இறங்கிச் செல்லும் வகையில் ஹெலிகாப்டர் தளமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பழைய விருந்தினர் மாளிகை சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் 6 தங்கும் அறைகள் அமைந்துள்ளன.
2 அறைகள் ஏ.சி. வசதி செய்யப்பட்டவை. இங்கு இந்திய குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என அனைத்து விஐபிக்களும் தங்கிச் சென்றுள்ளனர். இது தவிர இம் மாளிகையில் இருந்தவாறு சூரிய உதயத்தைப் பார்க்கும் வசதியும் உள்ளது.
1982-ல் திறக்கப்பட்ட பாரதி அரசு விருந்தினர் மாளிகையில் மொத்தம் 6 தங்கும் அறைகள் அமைந்துள்ளன. இதில் 2 அறைகளில் ஏ.சி. வசதி உள்ளது. 2003-ல் திறக்கப்பட்ட பொய்கை தங்கும் மாளிகையில் மொத்தம் 2 அறைகள் உள்ளன.
இவை இரண்டுமே ஏ.சி. வசதியுடன் உள்ளன. 2008-ல் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட புதிய அரசு விருந்தினர் மாளிகையில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இவை அனைத்தும் ஏ.சி. வசதியுடன் உள்ளது. இங்கு கான்ஃபரன்ஸ் ஹால், டைனிங் ஹால், ஓய்வறைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி மின்சாரம் தடைபட்டால் உடனடி மின்சாரம் கிடைக்கும் வசதி, அனைத்து அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், வாடகை குறித்த விவரங்களை அறைகளின் வாயில் கதவில் ஒட்டிவைப்பது, அனைத்து அறைகளிலும் 3 முதல் 5 நவீன இருக்கைகள் அமைத்தல், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இன்டெர்நெட், பேக்ஸ் வசதியுடன் கூடிய கணினி அலுவலகம், தங்கும் பயணிகளுக்குத் தேவையான சோப், பவுடர், எண்ணெய், டவல் அடங்கிய கிட் ஆகிய வசதிகளை உடனடியாக செய்ய ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...