அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அக். 5இல் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வரும் 5 ஆம் தேதி குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வரும் 5 ஆம் தேதி குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக,  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் அக். 5  ஆம் தேதி முற்பகல் 11  மணிக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்காக, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவில் அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இதில், அந்தந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி,  பேரூராட்சித் தலைவர்கள் குழுவின் தலைவராகவும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் குழுவின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் தலைமையாசிரியரால் தேர்வு செய்யப்படும் இரண்டு பள்ளிக் குழந்தைகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் ஒருவர், அப்பகுதி அங்கன்வாடி பணியாளர், அப்பகுதி கிராம செவிலியர், தொண்டு நிறுவன பிரதிநிதி,  சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளூர் காவல்துறை பிரதிநிதி ஆகியோர்கள் குழுவின் உறுப்பினராகவும் இடம்பெற்றுள்ளனர்.

 இவர்களது ஏற்பாட்டின் பேரில் வரும் அக். 5 ஆம் தேதி குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தை கடத்தலை  தடுத்தல், பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு,  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.ட

 மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் போன்ற குழந்தைகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.  விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தமான அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்படும். இந்த அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.