சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று விவிலிய ஞாயிறு கொண்டாட்டம்

குமரி மாவட்ட கத்தோலிக்க ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை விவிலிய ஞாயிறு கொண்டாட்டம் நடைபெறுகிறது.

Updated On :

குமரி மாவட்ட கத்தோலிக்க ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை விவிலிய ஞாயிறு கொண்டாட்டம் நடைபெறுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விவிலிய வாரம் கடைப்பிடிக்கின்றனர். இதன் நிறைவு நாள் விவிலிய ஞாயிறு ஆகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் விவிலியத்தில் கூறப்பட்டுள்ள போதனைகளை தங்கள் வாழ்வாக்கிக் கொள்ளத் தீவிரமாக வலியுறுத்துவதே விவிலிய வாரத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட விவிலிய வாரக் கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதையொட்டி, குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் விவிலிய பவனி, விவிலியச் சொற்பொழிவுகள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.

குலசேகரம் புனித அகுஸ்தீனார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் விவிலிய பவனிக்குப் பின்னர் திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலிக்கு பங்குப் பணியாளர் சூசையன் தலைமை வகித்து மறையுரை நிகழ்த்துகிறார். இதில், உதவிப் பங்குப் பணியாளர்கள் ஷெப்ரின், ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.