தேவாலயங்கள் மீதான தாக்குதலை கண்டித்து மறியல்: 90 பேர் கைது
தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, நாகர்கோவிலில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை சார்பில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, நாகர்கோவிலில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை சார்பில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த மறியலுக்கு கிறிஸ்தவ முன்னேற்ற சேனை நிறுவனர்- தலைவர் தியோடர் சேம் தலைமை வகித்தார். பொருளாளர் ஜான் விஜயகுமார், மேற்கு மாவட்டத் தலைவர் ஈசாக், செயலர் விபின்ஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலர் ஆன்றோ ஜெலஸ்டின், மகளிர் அணி நிர்வாகிகள் கலா, பிரமி, மாநில இளைஞரணி துணைச் செயலர் ஆஸ்பின் ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை கட்டாய மதமாற்றம் செய்வதைக் கண்டித்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை தாக்க முயன்றவர்களையும், அவரது வாகனத்தைச் சேதப்படுத்தியவர்களையும் கைது செய்யக் கோரியும் மறியலில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...