
தென்பாற்கடற்கரையில் அய்யா வைகுண்டர் தீப தரிசனம்
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரை அய்யா வைகுண்டர் தவவனத்தில் தீப தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு ராஜாக்கமங்கலம் தென்பாற்கடற்கரை அய்யா வைகுண்டர் தவவனத்தில் தீப தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் கலிவேட்டை, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. நிகழாண்டு அய்யா அவதார தினத்தை முன்னிட்டு சாமிதோப்பு அன்புவனத்தில் இருந்து வாகனப் பவனி புறப்பட்டு தென்பாற் கடற்கரைக்குச் சென்றது. அங்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மகாதீப தரிசனமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்வு நடைபெற்றது. இரவு ஊஞ்சல் சேவை, அன்னதர்மம், அய்யாவழிக் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பாலபிரஜாபதி அடிகளார், பேராசிரியர் தர்மரஜினி, வளவன், ராஜன், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




