குலசேகரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் குலசேகரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குமரி மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் குலசேகரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சித்திரங்கோடு, வலியாற்றுமுகம், சுருளகோடு, காயக்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாறைகள் உடைக்கப்பட்டு கனிம வளங்களான கருங்கல், ஜல்லி, பாறைத்துகள் உள்ளிட்டவை நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதை தடுக்க வலியுறுத்தி குலசேகரம் அரசமூடு சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் முபாரக் சமத் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் ஜான்சிலின் சேவியர் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரூர் செயலர் அஸ்வின், வீரத்தமிழர் முன்னணி செயலர் கோகுல் கிருஷ்ணன், விளவங்கோடு செயலர் சந்திரலால், பொன்மனை பேரூர் செயலர் சிவகுமார், குமரி சங்கத் தலைவர் சதீஷ், பத்மநாபபுரம் தொகுதிச் செயலர் நன்மாறன், ஆன்றோர் பேரவை நிர்வாகி இன்பராஜ் மற்றும் சீலன், நெடீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலர் நாகராஜன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...