மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குலசேகரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்திலிருந்து   பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் குலசேகரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 6:58 pm

DIN

குமரி மாவட்டத்திலிருந்து   பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் குலசேகரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சித்திரங்கோடு,  வலியாற்றுமுகம்,  சுருளகோடு, காயக்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாறைகள் உடைக்கப்பட்டு கனிம வளங்களான கருங்கல், ஜல்லி,  பாறைத்துகள் உள்ளிட்டவை நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதை தடுக்க வலியுறுத்தி குலசேகரம் அரசமூடு சந்திப்பில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் முபாரக் சமத் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் ஜான்சிலின் சேவியர் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரூர் செயலர் அஸ்வின்,  வீரத்தமிழர் முன்னணி செயலர் கோகுல் கிருஷ்ணன்,  விளவங்கோடு செயலர் சந்திரலால்,  பொன்மனை பேரூர் செயலர் சிவகுமார்,  குமரி சங்கத் தலைவர் சதீஷ், பத்மநாபபுரம் தொகுதிச் செயலர் நன்மாறன், ஆன்றோர் பேரவை நிர்வாகி இன்பராஜ் மற்றும் சீலன்,  நெடீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலர் நாகராஜன் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.