புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தமிழகத்துடன் குமரி இணைந்த நாள்: நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம்  தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, புதன்கிழமை நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:11 am

DIN

கன்னியாகுமரி மாவட்டம்  தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, புதன்கிழமை நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த் தமிழகத்துடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையிலும், இதற்காக போராடிய குமரித் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் நேசமணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், நாகர்கோவிலில் நேஷமணி மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு ஆண்டுதோறும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதன்கிழமை நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.விஜயக்குமார் எம்.பி.,  கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு நற்சான்றிதழ்களும் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோவும் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தார். நாகர்கோவில் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் இரா. ஜானகி,  மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கே.பகவதி பெருமாள், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித்,  கனகராஜன்,  நாஞ்சில் சந்திரன்,  ஞானசேகரன்,  காரவிளை செல்வன்,  ரெஜீஷ்ராஜ், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.