குரியன்விளை கோயிலில் இன்று பந்திருநாழி பொங்கல் வழிபாடு

களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற பாத்திமாநகர், குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (அக். 13) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.
Updated on
1 min read

களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற பாத்திமாநகர், குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (அக். 13) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.
இக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை கோயிலில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், பிற்பகலில் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் அம்மன் சுயம்பு எழுந்தருளல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் விக்ரமன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com