எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அக். 23 இல் பூதப்பாண்டியில் பிஎஸ்என்எல் சார்பில் ஆதார் எண் இணைப்பு முகாம்

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில்,  செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்  இணைப்பு முகாம் பூதப்பாண்டியில் திங்கள்கிழமை(அக்.23)  நடைபெறுகிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:12 pm

DIN

நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில்,  செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்  இணைப்பு முகாம் பூதப்பாண்டியில் திங்கள்கிழமை(அக்.23)  நடைபெறுகிறது.
  இது குறித்து,  நாகர்கோவில் தொலைத் தொடர்பு மாவட்ட  மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  செல்லிடப்பேசி   வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசி  எண்ணுடன்  ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது .   பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி  வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணுடன்  ஆதாரை இணைப்பதை உறுதி செய்யும் வகையில் பி.எஸ்.என்.எல் நாகர்கோவில்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவும் வகையில் நாகர்கோவிலில்  அக். 23 ஆம் தேதி பூதப்பாண்டி செல்லிடப்பேசி  நிலைய வளாகத்தில் இதற்கான  சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் இரவு  7 மணி வரை நடைபெறுகிறது .
இம்முகாமுக்கு செல்லிடப்பேசி வாடிக்கையாளர் யார் பெயரில் உள்ளதோ அவரே நேரில்   தங்களது ஆதார்  எண் விவரம் மற்றும் செல்லிடப்பேசியுடன் வரவேண்டும். இந்த சிறப்பு மேளாவில் சலுகை விலையில் புதிய சிம் கார்டுகள் வழங்கப்படும். எம்என்பி மூலம் பி.எஸ்.என்.எல். க்கு வரும் இதர தனியார் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு மற்றும் முதல்  ரீசார்ஜ் முற்றிலும் இலவசம் . மாத வாடகை ரூ. 49 என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் புதிய லேன்ட் லைன் இணைப்பிற்கும்,  மாத வாடகை ரூ. 249  திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் இன்டர்நெட் இணைப்பிற்கும் பதிவு செய்யப்படும்.  பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் இந்த சிறப்பு மேளாவில் பங்கு பெற்று பயன்பெறலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.