தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி
அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.


அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
காணிமடம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் போஸ்(62). இவர் தனது மனைவி வள்ளியம்மா மற்றும் குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட போஸ் குடும்பத்தினருக்கு ரெட்கிராஸ் குமரி மாவட்ட கிளை சார்பில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சஜித் நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் செயலர் பிரேமலலிதா, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார், கார்ட் கிராம வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...