மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மின்னணு குடும்ப அட்டை குளறுபடி: 6,000 புகார் மனு அளித்த எம்.எல்.ஏ.

கிள்ளியூர் தொகுதியில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக பெறப்பட்ட 6000 புகார் மனுக்களை வட்ட வழங்கல் அலுவலரிடம்  எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:20 am IST

கிள்ளியூர் தொகுதியில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக பெறப்பட்ட 6000 புகார் மனுக்களை வட்ட வழங்கல் அலுவலரிடம்  எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட அடைக்காகுழி, மெதுகும்மல், குளப்புறம், உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகள் உள்ளிட்ட 10 ஊராட்சிப் பகுதிகளிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், மின்னணு குடும்ப அட்டைகளில் உயர் குறியீடான என்பிஎச்எச் என்ற குறியீடுகளுடன் ஏராளமானோர் மின்னனு குடும்ப அட்டை பெற்றுள்ளதாகவும், இவற்றுக்கு பிஎச்எச் என்ற குறியீட்டுடன் மின்னணு அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் கோரி 6000 பேர் புகார் மனுக்களை அளித்திருந்தனர்.
இந்த மனுக்களை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தார்.  இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இது குறித்து ஏற்கெனவே துறை உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியது: என்.பி.எச்.எச். என்ற அட்டை முன்னுரிமை அற்றவர்களுக்கானதாக உள்ளது. இம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இதே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ரேஷன் உணவுப் பொருள்கள் கிடைக்காத நிலை ஏற்படும். ஆகவே, உரிய விசாரணை நடத்தி தகுதியான பயனாளிகளுக்கு பிஎச்எச் என்ற குறியீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தெரிவித்தார். 
இந் நிகழ்ச்சியில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெஞ்சமின்,  நிர்வாகிகள் மேரிபாய், பால்ராஜ், லூயிஸ், லலிதா, டென்னிஸ், பால்ராஜ், நேசமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.