தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குமரியில் சித்திரையை வரவேற்கும் கணிக் கொன்றை மரங்கள்

குமரியில் சித்திரையை வரவேற்கும் விதமாக கணிக் கொன்றை மரங்கள் சரம்,  சரமாக பூக்களை பூத்த வண்ணம் காட்சியளிக்கின்றன.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:52 am

குமரியில் சித்திரையை வரவேற்கும் விதமாக கணிக் கொன்றை மரங்கள் சரம்,  சரமாக பூக்களை பூத்த வண்ணம் காட்சியளிக்கின்றன.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதம் பிறக்கப்போகிறது என்பதை உணர்த்தும் மரங்கள் கணிக் கொன்றை மரங்கள் தான்.  மஞ்சள் நிறங்களில் சரம், சரமாகத்   தொங்கிக்கிடக்கும் இம்மரப்பூக்கள் சித்திரை மாதம் பிறக்கிறது என்பதை நினைவுப் படுத்திவிடும். 
குமரியிலும், கேரளத்திலும் சித்திரை விஷு என்று சொல்லப்படும் சித்திரை முதல்நாளில் இப்பூக்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுவிடும். கோயில்களில்,  வீடுகளில் வைக்கப்படும் சித்திரை கனி காணல் நிகழ்ச்சியில் கணிக்கொன்றைப் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. சித்திரை விஷு நாளில் காலையில் எழுந்தவுடன் முதல் காட்சியாக கனிகளுடன்,  இந்தப் பூக்களையும் பார்த்தால் ஏக ஐஸ்வர்யம் ஆண்டு முழுவதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கோயில்களிலும்,  வீடுகளிலும் கணிக்கொன்றை மரங்கள் தற்போது பூத்துக் குலுங்கிய நிலையில் உள்ளன. சில மரங்களில் இலைகளே வெளியில் தெரியாதவாறு அத்தனையும் பூக்களாகக் காணப்படுகின்றன. மக்கள் இந்த மரங்களில் அருகில் நின்று நிழற்படங்களை எடுத்தும்  கைப்படம் எடுத்தும் சமூக வலை தளங்களில் பதிவிட்டவாறு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.