தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கதுவா சம்பவம்: நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அஞ்சலி

கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:03 am IST

கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதன் துணை பொதுமேலாளர் உஷா தலைமை வகித்தார்.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைச் செயலர் பி.இந்திரா அஞ்சலி உரையாற்றினார்.  சங்க நிர்வாகிகள் பி.ராஜூ, ஜார்ஜ், ஆறுமுகம், சின்னத்துரை  உள்பட பலர் கலந்துகொண்டனர். 

களியக்காவிளையில்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி திமுக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் களியக்காவிளை சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர். சினி உள்ளிட்டோர் பேசினர். திமுக நிர்வாகி ஷாஜகான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுச் செயலர் மேக்கோடு சலீம், களியக்காவிளை வர்த்தக சங்கத் தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.