வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

புதுக்கடை பேரூராட்சியில் தெருவிளக்குகள் சீரமைக்கப்படுமா?

புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:59 am IST

புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உயர்மின்னழுத்தம், தரமான தெருவிளக்குகள் அமைக்காதது போன்ற காரணங்களால் மின்கம்பங்களில்  தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, 15 வார்டுகளைக் கொண்ட புதுக்கடை பேரூராட்சியில் ஆர்.சி தெரு, அம்மாள்நகர், கைசூண்டி, பார்த்திபபுரம், முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் முறையாக  எரிவதில்லையாம்.
இதனால், தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், இரவு நேரங்களில் திருட்டு மற்றும் சமூகவிரோத செயல்கள் குறித்த அச்சம் நிலவுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெருவிளக்கு எரியாத பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு,  விளக்குகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.