கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் அம்மா திட்ட 4ஆம் கட்ட சிறப்பு முகாம் ஏப்.20 ஆம் தேதி கல்குளம் வட்டத்தில் கடியப்பட்டினம் வருவாய் கிராமத்திற்கு, கடியப்பட்டினம், புனித பீட்டர் நடுநிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் குளப்புறம் வருவாய் கிராமத்திற்கு, பிறாக்கோடு, கிறிஸ்து அரசர் உயர்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நிலபிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


