புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உயர்மின்னழுத்தம், தரமான தெருவிளக்குகள் அமைக்காதது போன்ற காரணங்களால் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, 15 வார்டுகளைக் கொண்ட புதுக்கடை பேரூராட்சியில் ஆர்.சி தெரு, அம்மாள்நகர், கைசூண்டி, பார்த்திபபுரம், முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லையாம்.
இதனால், தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், இரவு நேரங்களில் திருட்டு மற்றும் சமூகவிரோத செயல்கள் குறித்த அச்சம் நிலவுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெருவிளக்கு எரியாத பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, விளக்குகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


