வெள்ளமடம் - தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள உப்பாத்து ஓடையைப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளமடம் - தோவாளை தேசிய நெடுஞ்சாலையின் அருகே உப்பாத்து ஓடை உள்ளது. இந்த ஓடையானது தோவாளைசானலில் இருந்து வெள்ளமடம் கிறிஸ்துநகர் அருகே இரண்டாக பிரிந்து சகாய நகர் ஊராட்சியில் உள்ள வண்டநேரி குளத்திற்கும், வெள்ளமடம் அருகே செல்கின்ற புத்தனார் கால்வாயிலும் இணைகிறது.
இந்த ஓடையில் மழைக் காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டினார்போல் ஆபத்தான நிலையில் தண்ணீர் செல்லும். இந்நிலையில் தோவாளை அருகே விசுவாசம்புரம் அருகே தொடக்கப் பள்ளின் அருகே செல்கிற இந்த ஓடையின் சில இடங்களில் மட்டுமே பக்கச் சுவர் கட்டப்பட்டு உள்ளது. சில இடங்களில் பக்க சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் இரவு ரேங்களில் வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறி ஓடையில் தவறி விழும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஓடையில் முழுமையாக பக்கவாட்டுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


